Saturday, March 7, 2009

போவோமா ஏற்காடு - ஒரு பயணக்கட்டுரை









இது checktronix குழுமத்தில் நாங்கள் மேற்கொண்ட ஏற்காடு பயணத்தைப் பற்றிய பயணக்கட்டுரை. இந்த பயணம் திட்டமிட்டது அல்ல. ஒரு நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் எடுத்த திடீர் முடிவு. பயணம் பற்றிய நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதன் நோக்கம் இதில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றேன்.




சென்னையில் இருந்து பயணித்தவர்கள் விவரம்: நாங்கள் இரு குழுவினராக பிரிந்தோம். முதல் குழுவில் சுதர்சன், ஜயந்தா, கிஷோர் மற்றும் துரைபாபு ஆகியோர் பிப்ரவரி மாதம் பத்தன்போதாம் நாள் வியாழன் மதியம் மூன்று முப்பது மணிக்கு அவர்கள் தங்கள் மாலை தேனிர் அருந்திவிட்டு சுதர்சனின் ஹுண்டாய் கெட்ஸ் கார் மூலம் பயணத்தை துவங்கினார்கள்.

எங்களின் இரண்டாவது குழுவில் நான், கிருஷ்ணன், மற்றும் பிரபு ஆகியோர் மறுநாள் மதியம் மூன்று மணிக்கு புறப்பட ஆயத்தமானோம்.

நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாளும் நேரமும் வந்தது. மதிய உணவு முடிந்தவுடன் நாங்கள் கிளம்புவதற்கான எல்லா வேலைகளையும் முடித்தோம். வழியில் தாக சாந்திக்கு தண்ணீர், நொறுக்கு தீனி, பழச்சாறு ஆகியவை வாங்கிக்கொண்டு கவனமாக எங்களின் உடைமைகளை பிரபுவின் மாருதி சென் காரில் ஏற்றினோம். நான் பயணத்திற்கு முதல் நாள் இணைய வலையில் ஒரு பயணக்குறிப்பேடு ப்ளாகில் சில தகவல்களை எடுத்துகொண்டேன். அதை பிரபுவிடம் அளித்தேன்.

எங்கள் பயணம் சில புகைப்பட நிகழ்வுகளோடு தொடங்கியது. நாங்கள் கீழ்கண்டவாறு பயணப் பாதையை முடிவு செய்தோம்




கீழ்பாக்கம் ->கோயம்பேடு -> பூந்தமல்லி -> ஸ்ரீபெரும்பதூர் -> காஞ்சிபுரம் ( மண்டபம் ஜங்ஷன் )-> வேலூர் -> கிருஷ்ணகிரி -> தர்மபுரி -> சேலம் -> ஏற்காடு




குறிப்பு: பயண நிகழ்வுகளின் குறிப்பேடு அட்டவணை இக்கட்டுரையின் கடைசியில் காண்பிக்கப்படும்.

கோயம்பேடு அருகில் எரிபொருள் நிரப்பிய பின் வாகனம் நகரத்தின் விலும்பிற்கு நகர்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்பதூர் நெருங்கிய வேளையில் அரை மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டோம். பின்னர் பிரபு வாகனத்தின் வேகத்தை கூட்டினார். வேகமானி நூறுக்கு குறையாமல் தன் பணியை செய்துகொண்டிருக்க முக்கிய தடங்களை நாங்கள் கடந்து கொண்டிருந்தோம். பிரபு மற்றும் கிருஷ்ணன் மதிய உணவு குறைவாக எடுத்துகொண்டது தெரியவர, பிஸ்கெட் , மாசா ஆகியவற்றை பதம் பார்த்தோம். வண்டி ஆம்புரை தொட்டதும் பிரியாணி சாப்பிட மற்ற இருவருக்கும் ஆசை வந்தது. எங்கள் வாகனம் நெடுஞ்சாலையின் மறுபக்கம் சென்றதால் வேண்டிய உணவு விடுதிகள் இல்லை. ஆனால் தேனிர் அல்லது காரவகை வாங்கிக்கொள்ள முடிவெடுத்து மின்னுர் அருகில் காரை நிறுத்தினோம். காராபூந்தி, தட்டை வாங்கிகொண்டோம்.

மாலை பொழுது வேகமாக நிறைவுபெற்று இரவின் கருமை சூழ ஆரம்பித்தது. கடைசி சுங்கவரி சாவடியை தாண்டியதும் சுமார் ஏழு மணிக்கு கிருஷ்ணகிரி - தர்மபுரி நெடுஞ்சாலை பிரிவை அடைந்தோம். மேற்கொண்டு எங்கள் பிரயாணம் தர்மபுரி நோக்கி சென்றது. சுமார் மணி எட்டு பதினைந்து அளவில் நாங்கள் அதியமான் அரண்மனை என்ற பெயர்கொண்ட உணவு மற்றும் தங்கும் விடுதியை அடைந்தோம். திட்டமிட்டபடி எங்களின் தர்மபுரி அலுவலக ஊழியர்கள் அந்த விடுதியில் தங்குவதற்கு அறைகள் எடுத்திருந்தார்கள். எங்கள் உடைமைகளை எங்களுக்கான அறைகளில் வைத்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தர்மபுரி checktronix அலுவலகத்தை அடைந்தோம். சில மாற்றங்கள் தெரிந்தாலும் அங்கு மாறாத அடையாளமாக சுவற்றின் வீறல்கள் இன்னும் இருந்தன. அங்கு பணியாற்றும் கென்னடி என்ற சகஊழியர் அங்கு உள்ள பல அறைகளின் பயன்பாடுகளை கூறினார். அங்கு ஏற்கனவே அலுவலக நிமித்தமாய் எங்களுக்கு முன்னர் சென்று சேர்ந்த ஜயந்தா, சுதர்சன், கிஷோர் ஆகியோரை எங்கள் மென்பொருள் ஆக்கம் இயக்குனர் உதயகுமாருடன் உதாந் சந்தித்தோம்.

விவேக் என்ற ஊழியரை அறிமுகம் செய்து வைத்தார் கென்னடி. விவேக் பூட்டான் நாட்டை சேர்ந்தவர். சேலத்தில் அறை எடுத்து தங்கி இருந்ததினால் அங்கு செல்ல எங்களிடமிருந்து விடைபெற்றார். பின்னர் இந்த சிற்றுலாவிற்கு முக்கிய பொறுப்புகளை ஏற்றுகொண்ட ஜான் கிறிஸ்டோபர் அங்கு வந்தார். வெகுநாள் கழித்து பார்த்ததினால் சற்று அளவளாவி கொண்டிருந்தோம். பின்னர் மறுநாள் காலை பயணத்திட்டத்தை முடிவு செய்து அவர் வீட்டுக்கு கிளம்பினார்.

நான், கிஷோர், பிரபு மற்றும் சுதர்சன் அந்த உணவு விடுதியில் இரவு சாப்பிட்டுவிட்டு எங்கள் அறைக்கு ஓய்வு எடுக்க சென்றோம்.தங்கும் வசதிக்கு அங்கு குறைவில்லை என்று சொல்லலாம். எழுநூற்று ஐம்பது ரூபாய்க்கு இரண்டு பேர் ஓய்வு எடுக்க போதுமானது. மேலும் அதில் குளிர் சாதன வசதியும் இருந்தது.



மறுநாள் பிப்ரவரி இருபத்திஒன்று விடியற்காலை, சிறிது குளிராக இருந்தது. எனினும் நான் நடை பயிற்சிக்காக விடுதியில் இருந்து அலுவலக அமைந்துள்ள இடம் நோக்கி சென்று வந்து பின்னர் மற்ற அறைகளில் இருப்பவர்களை எழுப்பும்வன்னம் அழைப்பு மணி அடித்துவிட்டு என் அறைக்குள் சென்றுவிட்டேன். சிறிது நேரம் யோகா பயிற்சிக்கு பின் குளியல் முடித்து தயாரானேன். என்னுடன் அறையை பகிர்ந்து கொண்ட கிருஷ்ணன் தன் காலை கடைமைகளை முடித்து ஆயத்தமானார். தர்மபுரி ஊழியர்கள் ஜான், பரத், வினோத், சந்தோஷ், மற்றும் கார்த்தி வேறு வாகனத்தில் எங்கள் இடத்திற்கு வந்து சேர அனைவரும் அவரவர் வாகனங்களில் ஏறிக்கொண்டு தர்மபுரியிலிருந்து தொப்புர் வழியாக சேலம் பயணித்தோம். இடையில் கிருஷ்ணன் அவர்களுக்கு நேற்றைய உணவு செரிமானம் ஆகாததினாலும் தூக்கம்மின்மையாலும் வாந்தி எடுத்தார். சிறிது தடைக்கு பின்னர் மீண்டும் வாகனம் கிளம்பியது. ஒன்பதிஇமுக்கால் மணி இருக்கும் சேலம் ஜங்ஷன் தாண்டியதும் ஹோட்டல் சாரதியில் சிற்றுண்டி முடித்துவிட்டு பின் ஏற்காடு நோக்கி செல்லும் சாலையில் பயணித்தோம். நான் பயணித்த காரில் தர்மபுரி அலுவலகத்தில் பணியாற்றும் சுதர்சனம் சேர்ந்துகொண்டார். வாகனம் சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நெருங்கும்போது உதயகுமார் மற்றும் அவர் துணைவியார் சவிதா மற்றும் அவர்களுடைய மகள்கள் ஸ்ருதி, சம்ருக்தி ஆகியோர் தங்கள் மகிழுந்தில் எங்களுடன் சேர்ந்தார்கள்.




சரியாக பத்து முப்பது மணி அளவில் மலைப் பாதையில் எங்கள் வாகனங்கள் ஏறத்தொடங்கின. இங்கு சில தகவல்களை சொல்லவேண்டும். மலையில் மொத்தம் இருபது கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. மலைப்பாதையில் மேலே செல்ல செல்ல மாக்னசைட் தாது எடுக்கும் இடம் தெரிகிறது.

ஏற்காடு பெயர் காரணம்: சேர்வராயன் மலைத்தொடரில் அடர்ந்த காட்டின் மத்தியில் ஏரியுட்ன் அமைந்த ஊர் (ஏரி + காடு = ஏற்காடு). இது கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துஉள்ளது.
மலைப்பாதையின் கால்வாசி தூரம் சென்றவுடன் குரங்கு பட்டாளம் தென்பட்டது. மலைவனப்பின் அழகை ரசித்தவாறே சென்றுகொண்டிருந்தோம். பாதிவழியில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். பகல் பன்னிரண்டு மணி நெருங்கியபோது ஏற்காடு அடைந்தோம்.







ஏரி அருகே வாகனங்களை நிறுத்திவிட்டு மேற்கொண்டு சுற்றிபார்க்க வேண்டிய இடங்களை பற்றியும் தங்கும் விடுதி இருக்கும் இடத்தை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் ஜான் லாப்டாப்பில் தங்கும் விடுதியின் தொலைபேசி எண்களை தேடிகொண்டிருந்தார் ஒருவழியாக விடுதியின் இருப்பிடம் தெரிந்தது. பார்க்கவேண்டிய இடங்களை தேர்வு செய்துவிட்டு கிளம்பினோம். லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் மற்றும் சில்ட்ரன் சீட் ஆகிய இடங்களை பார்த்துவிட்டு கடைசியாக ரோஸ் கார்டன் சென்றோம். அங்கு சீசன் இல்லை என்பதால் பூக்கள் அவ்வளவாக இல்லை. எனினும் அங்கு இருந்த மற்ற பூச்செடிகளை கண்டு ரசித்தோம். பல புகைபடங்களை எடுத்துகொண்டோம். பசுமை குடிலில் வளர்க்கப்படும் மிளகு நாற்றங்கால்கள், காப்பி செடிகள், பல அலங்கார பூச்செடி வகைகளை பார்த்தோம். பின்னர் தங்கும் விடுதிக்கு புறப்பட்டோம்.




பொன் கைலாஷ் உணவுவிடுதி கடந்து தங்கும் விடுதிக்கு சென்றோம். அந்த இடத்தில் பல தனி பங்களாக்கள் இருந்தன. எங்களுக்கு ஒதுக்கபட்ட இடம் பத்து பேர் தங்கக்கூடிய வசதியுடன் இருந்தது. எங்கள் இனிமையான நேரம் அப்பொழுதுதான் ஆரம்பித்தது. தெரியாதனமாக அங்கிருந்த உணவு பட்டியலை எடுத்து ஆர்டர் கொடுத்தோம். அப்பொழுது மணி இரண்டு முப்பது இருக்கும். மூன்று முப்பது மணிக்கு தயாராகும் என்று அதை நம்பி பக்கத்தில் இருந்த பக்கோடா பாயிண்ட்சென்றோம். நல்ல பசியில் பார்க்க பொருத்தமான பெயர் கொண்ட இடம். அங்கு பிரமிடு போன்ற அமைப்பில் சில நினைவுச் சின்னங்கள் கற்களால் அமைக்கபடிருந்தன. அரைமணிநேரம் அங்கு சுற்றிபார்த்துவிட்டு மீண்டு பொன் கைலாஷ் உணவு விடுதிக்கு சென்றோம். எங்களுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. உணவு இன்னும்um தயாராகிக்கொண்டிருந்தது மூன்றரை மணியிலிருந்து ஐந்து மணி வரை சமையல் தொடர்ந்தது. ஒருவழியாக உணவு கிடைக்கப்பெற்று அனைவரும் உட்கொண்டோம்.
இரண்டு மணிநேரம் உணவு விடுதியில் வீணாகிப்போனதால் சேர்வராயன் கோயில் செல்ல இயலவில்லை. மாறாக ஏரியில் படகு சவாரி செய்யச் சென்றோம். எனக்கும் தண்ணிருக்கும் ஆகாது என்பதால் நான் படகு சவாரி செய்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆதவன் அன்றைய பொழுதின் பணியை முடித்துவிட்டு விடைபெற்று கொண்டிருந்த வேளையில் உதயகுமார் மற்றும் அவர் குடும்பத்தினரும் , ஜான், சுதர்சனம், சந்தோஷ் ஆகியோரும் மற்றவர்களிடம் விடைபெற்று சென்றனர்.




இரவு பொழுது கழித்திட நாங்கள் தங்கும் விடுதியை அடைந்தோம். அனைவரும் சிறிது ஓய்வு எடுத்தனர். எட்டுமணி பதினைந்து நிமிடம்போல நான், கிஷோர், கிருஷ்ணன், பிரபு , ஜயந்தா ஆகியோர் சிற்றுண்டி வாங்கப் பேருந்து நிலையம் அருகே சென்றோம். மணி ஒன்பதே கால் மீண்டும் விடுதியை அடைந்து அனைவருடன் வாங்கி வந்த உணவை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் உரையாடிய பின், நான் முதலில் தூங்க சென்றேன். பின்னர் அனைவரும் சுமார் பதினொன்றரை மணிக்கு தூங்க சென்றார்கள்.




காலை எப்பொழுதும் போல் நான்கே முக்கால் மணிக்கு எழுந்து பார்த்த பொழுது கும்மிருட்டாகவும் குளிராகவும் இருந்தது. அதனால் மீண்டும் தூங்க சென்றேன். பிறகு ஐந்தே முக்கால் மணிக்கு காலை கடைமைகள் முடித்து குளிருக்கு ஏற்ற உடை அணிந்து வெளியசெல்லும்போது சுதர்சன் உடன் வந்தார். கையில் கேமரா இருந்ததால் இனிய பொழுது புலரும் காட்சிகளை நிரப்பிகொண்டிருந்தோம்.

பறவைகள் இறைதேட மண்டிய புதர்களில் இருந்து வெளியே வந்து கொண்டுஇருந்தன. பூச்செடிகள் பூத்து குலுங்க பனி ஆவியாகிகொண்டிருக்க சூரியன் வெளிவர தொடங்கினான். மணி ஏழு முப்பது இருக்கும் மீண்டும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். பின்னர் அனைவரும் குளித்துவிட்டு சிற்றுண்டி சாப்பிடச் சென்றோம். பிறகு எங்கள் அடுத்த திட்டம் தர்மபுரி செல்லவேண்டும் என்பது. ஆனால் திடீர் பயண மாற்றம். நேற்று மாலை செல்ல முடியாத சேர்வராயன் கோவிலுக்கு எங்கள் வாகனங்கள் திரும்பின.





அடுத்த பத்து நிமிடத்தில் சேர்வராயன் கோவிலுக்கு சென்றோம். அதிக படாடோபம் இல்லை. சாதாரண தோற்றம். குகையினுள் சேர்வராயன் (விஷ்ணு) மற்றும் துணைவியார் காவேரி காட்சி தருகிறார்கள். அங்குள்ள பழங்குடியினர் சுற்றி உள்ள கிராமங்களை இவர்கள் காப்பதாக நம்புகின்றனர். மேலும் அந்த கோவிலின் குகை காவேரி ஆற்றிற்கு செல்லவதாக நம்புகின்றனர்.
சிறிது நேரம் அங்குள்ள சமவெளியான இடத்தை சுற்றி பார்த்தோம். நேரம் பத்து முப்பது ஆனது நாங்கள் மலையிலிருந்து கிழே இறங்கினோம். சேலம் ஜங்ஷன் அடைவதற்குள் முன்னர் புகைப்படம் எடுக்க தவறிய பழைய மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு தென்பட அதை படம் பிடித்தேன். பின்னர் பயணம் தர்மபுரி நோக்கி சென்றது.




ஒன்றே முக்கால் மணி அளவில் தர்மபுரி சேந்தோம். வினோத், பரத், மற்றும் கார்த்திக் எங்களிடம் இருந்து விடை பெற சிறிது தாகசாந்திக்கு பின்னர் பயணம் தொடங்கியது. மதிய உணவு சாப்பிட வழியில் ஆம்பூரில் வாகனத்தை. பிரபு, கிஷோர், கிருஷ்ணன், துரை, சுதர்சன் மற்றும் ஜயந்த ஸ்டார் பிரியாணி ஹோட்டலில் நுழைந்தனர். அதற்கு அடுத்து இருந்த வெஜிடேரியன் ஹோட்டலில் ஒரு மீல்ஸ் சாப்பிட சென்றேன். துணைக்கு ஆள் இல்லாததால் உடன் சாப்பாடு முடித்து ஸ்டார் ஹோட்டலில் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் அனைவரும் குஸ்கா சாப்பிட்டு கொண்டிருந்தனர். மூன்று மணிக்கு அதுதான் கிடைக்கும்.

அடுத்து வழியில் இரண்டு இடத்தில் மட்டும் தேனிருக்கு நின்று விட்டு பூந்தமல்லியில் சுதர்சன் விடைபெற்றுக்கொள்ள, மற்றவர்கள் பிரபுவின் காரில் சென்றோம். ஜெயந்தாவை நந்தனம் சிக்னலில் இறக்கிவிட்டு நாங்கள் சென்னை அலுவலகத்தை சுமார் எட்டுமணிக்கு வந்தடைந்தோம்.




தொடங்கிய இடத்தில் பயணம் முடிவுற்றது.



பயணக்குறிப்பு அட்டவணைக்கு இங்கு கிளிக் செய்யவும்






மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.

Wednesday, February 25, 2009

அறிமுக உரை

வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

இது எனக்கு முதல் தமிழ் ப்ளாக் ஆகும். இதில் எனக்கு தெரிந்த பல விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

எனது சக ஊழியர் ஜான் எழுதிய தமிழ் ப்ளாக் எனக்குள் ஆர்வத்தை தூண்டியது. அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இதற்கு முன்னர் ஒரு தனிப்பட்ட ஆங்கில ப்ளாக்கை உருவாக்கிஇருந்தேன். அதனை மேற்கொண்டு தொடர இயலவில்லை.

தற்பொழுது சில நிகழ்வுகளை எனக்கு தெரிந்தவர்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறேன்.

ப்ளாக் எழுத என்னவோ ஆர்வம் வந்தாலும் அதை எழுத ஆரம்பிக்கும் பொது சில சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. தமிழில் தட்டச்சு தெரிந்ததுதான் அதற்கு காரணம். ஆனால் இங்கு "Transliteration" மூலம் தொடர்வது சற்று கடினமாக இருந்தது. இப்பொழுது பழகிக்கொண்டிருக்கிறேன்.

ஒற்று பிழைகள் அதிகம் இருக்கும். அதை பொறுத்துக்கொள்ளவும். மேலும் ஏதேனும் பிழை இருப்பின் தெரியப்படுத்தவும்.

உங்கள் ஆதரவை பொருத்து நிறைய நிகழ்வுகளை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

நன்றி

Monday, February 23, 2009

Myself

Hey there! Glad to welcome you to my blog. I am Gopi from Chennai, Tamil Nadu, India.




I am very happy that I found a channel to express my thoughts, feelings, desires to you and entire world.




I hope you would carry on with me through my journey via these blogs.




Happy Days Ahead